மதுரை நகரில் இன்று காலை கோடை மழை பெய்தது.
தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காண்பட்ட நிலையில், மதுரை மாநகர் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்தது.
மதுரை மாநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.