மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்
பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், உணவு பற்றி பேசும்மோடி யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை அவர் எப்படி தீர்மானிக்க முடியும்?

ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு ரூ. 1,960 கோடியா? ரூ.1,200 கோடி செலவிட்டு மாநில நிதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 63,246 கோடியில் மெட்ரோ பணி நடப்பதாக பொய்க்கணக்கு கூறுகிறது பாஜக.

பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்
100 மோடிகள் வந்தாலும்... திருமாவுக்கு ஆதரவாக கார்கே பிரசாரம்

அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து மிரட்டி வசூல் செய்யும் வசூல் ராஜாவாக பிரதமர் மோடி உள்ளார்.

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அனைத்துத் தரப்பு மக்களுக்குமானது திமுக அரசு.

குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டியை எதிர்த்த மோடி பிரதமரானதும் நடைமுறைப்படுத்தினார்.

பிரதமர் மோடியின் நண்பர்களான கார்ப்பரேட்டுகளுக்குத்தான் ஜிஎஸ்டியால் பலன் என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com