கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எந்த ஒரு அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் நீடிக்கக் கூடாது -ப.சிதம்பரம்

News image

ப. சிதம்பரம்

Updated On :17 ஏப்ரல் 2024, 12:04 pm

எந்த ஒரு அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசியதாவது, “பிரதமர் மோடி தலைமையில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த அரசு விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தையும் மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. இதை முன்னிறுத்தியே இந்த அரசு நீக்கப்பட வேண்டும். எந்த ஒரு அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் நீடிக்கக் கூடாது. எண்னம், கொள்கையில் மாற்றம் கொண்ட அரசு அமைய வேண்டும்.

பாஜக 420 முதல் 430 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் 25 தொகுதிகளையும் இழந்தால் 400 தொகுதிகளை எப்படி வெல்வார்கள்?” என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.