
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 20 முதல் 22 சதவீத வாக்குகள்தான் 11 மணி வரை பதிவாகியுள்ளன.
திரைப்பிரபலங்கள் பலரும் காலையிலேயே தங்களது வாக்கினை பதிவிட்டனர்.
இந்நிலையில் ரஷியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வெள்ளை நிற ஆடை உடுத்தி வந்துள்ளார். கடந்த தேர்தலில் அவர் உபயோகித்த வாகனத்தின் நிறம் உள்பட பலதும் இணையத்தில் பேசுபொருளானது.
கட்சி தொடங்கியபின் முதன்முறையாக வாக்களித்துள்ளார் விஜய். கையில் காயத்துடன் வாக்களித்தது குறித்து விஜய் ரசிகர்கள்/ ரசிகைகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கோட் படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட் படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு விஜய் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கியுள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.