வாக்களித்த விஐபிக்கள்!

வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து விஐபிக்கள், பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
வாக்களித்த விஐபிக்கள்!

தமிழகத்தில் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து விஐபிக்கள், பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

திருச்சி கிராப்பட்டியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்.

தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள கீதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களித்த விஐபிக்கள்!
அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

தொடர்ந்து நினைவு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை செலுத்தினார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆவடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்த முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் எம்எல்ஏ.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் நடேசன் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காஞ்சிபுரம் மக்களவை(தனி)தொகுதி வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் தனது வாழ்க்கைப் பதிவு செய்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைக்குட்பட்ட ஹார்விபட்டியில் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் வாக்குப்பதிவு செய்து செய்தியாளர்களுடன் பேசியதாவது: இன்றைய நாள் ஜனநாயக கடமையையும், ஜனநாயகத்தை காக்கிற கடமையும் ஆற்ற வேண்டிய நாள். எனவே வாக்காளப் பெருமக்கள் அனைவரும் இன்று வந்து வாக்களிக்க வேண்டும். நானும் எனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறேன். மகிழ்ச்சி என்றார்.

நடிகரும் இயக்குநரான சசிகுமார் தனது வாக்கினை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com