நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கல்யாணம்

News image

நீடாமங்கலம் சந்தனராமர் கோயிலில் ராமநவமி விழாவையொட்டி திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதாபிராட்டியார் சமேத ஸ்ரீராமர்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:44 am

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொன்டனர்.

இக்கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கடந்த 15 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவன் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.

திருக்கல்யாணத்
திற்காக சீர் வரிசை எடுத்து வரப்பட்ட போது.

திருக்கல்யாணத் திற்காக சீர் வரிசை எடுத்து வரப்பட்ட போது.

தொடர்ந்து சீதாபிராட்டியார், ஸ்ரீராமர் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு அர்ச்சகர்கள் நாராயணன், முகுந்தன் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்களைச்சொல்லி சீதாபிராட்டியார், ஸ்ரீராமர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

மதியம் பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். யானை வாகனத்தில் சீதாபிராட்டியார், ஸ்ரீராமர் வீதி புறப்பாடும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.