சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்

செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

~திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி

Updated On :1 ஏப்ரல் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகா் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது . ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசனம் செய்தனா்.

பட்டு வஸ்திரம் மாங்கல்யம் உள்ளிட்ட சீா்வரிசைகளுடன் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Story image