ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஸொமாட்டோ பயன்பாட்டுக் கட்டணம் அதிகரிப்பு

ஸொமாட்டோ பயன்பாட்டுக் கட்டணம் அதிகரித்துள்ளது.

News image
zomato065106
Updated On :22 ஏப்ரல் 2024, 6:47 am

DIN

ஸொமாட்டோவில் பயன்பாட்டுக் கட்டணம் 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதாவது, ஒரு உணவு டெலிவரி ஆர்டருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 4 ரூபாயாக இருந்தது.

ஸொமாட்டோ நிறுவனம் நாள்தோறும் 20 லட்சம் முதல் 22 லட்சம் ஆர்டர்களை விநியோகம் செய்து வருகிறது. ஒரு ஆர்டருக்கு 1 ரூபாயை உயர்த்தினால் கூட அதன் லாபம் எகிறிவிடும். ஏற்கனவே, ஜனவரி மாதம் வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை ரூ.3 ஆக இருந்தது ரூ.4 ஆக உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே, ஸ்விக்கியில் உணவு டெலிவரி கட்டணம் ரூ.5 ஆக உள்ளது. இதுவரை ஸொமாட்டோ நிறுவனம் இதனை டெலிவரி கட்டணத்துடன்தான் கூடுதலாக வசூலித்து வந்தது. இதனை தற்போது ஸொமாட்டோவும் ரூ.5 ஆக உயர்த்திவிட்டது.

இந்த கட்டண உயர்வு, ஸொமாட்டோவின் கோல்டு உறுப்பினர்களுக்கும் பொருந்துமாம். மிக விரைவாக உணவுகளைச் சேர்க்கும் ஸொமாட்டோவின் பிளிங்கிட், தற்போது ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.2 கட்டணமாக வசூலிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.