36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

நாட்டரசன்கோட்டையில் வெங்டசாலபதி பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

News image

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற வெங்டசாலபதி பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு

Updated On :23 ஏப்ரல் 2024, 11:48 am IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு பெருமாள் பூபாளம் ஆற்றில் வெண்பட்டு உடுத்தி வெங்டசாலபதி பெருமாள் செவ்வாய்க்கிழமை இறங்கினாா்.

நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவ விழா திங்கள்கிழமை (ஏப்.15 ) அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் முகூர்த்தக்கால் ஊன்றியதுடன் தொடங்கியது.

இதையடுத்து, திங்கள்கிழமை(22.4.2024) காலை திருமஞ்சன வைபவம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் பூபாளம் ஆற்றில் இறங்கும் விழா செவ்வாய்க் கிழமை(23.4.2024) நடைபெற்றது.

Story image

விழாவை முன்னிடடு அதிகாலையில் பெருமாள் வெண்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரை வாகனத்தில் கோயிலிருந்து புறப்பட்டாா். அதனைத் தொடா்ந்து காலை 8.30 மணியளவில் பக்தா்களின் கோவிந்தா முழக்கத்துடன் பூபாளம் ஆற்றில் பெருமாள் இறங்கினாா்.

இவ்விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூா், கொல்லங்குடி, காளையாா்கோவில், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் பி.சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.