தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

தில்லி ஜந்தர் மந்தரில் செல்போன் கோபுரம், மரத்தின் மீது ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் தமிழக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனா். மத்திய அரசு விவசாய விளை பொருள்களின் விலையை இருமடங்காக உயா்த்த வேண்டும், விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேகேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு இப்போராட்டத்தை நடத்த அவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

இந்த நிலையில், இன்று காலை திடீரென பெண்கள் உள்பட சில விவசாயிகள் செல்போன் கோபுரம் மீதும் மரத்தின் மீதும் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக டவர் மீதும் மரத்தின் மீதும் ஏறிய தில்லி காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் விவசாயிகளை வலுகட்டாயமாக கீழே இறக்கினர்.

மேலும், பல்வேறு வகையில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com