குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

குடிபோதையில் ஏற்பட்ட தகராரில், மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை காவல் துறையினர் கைது செய்தனர்.
குடிபோதையில் தகராறு:  மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

கோவை பேரூர் அருகே கரடிமடைப் பகுதியைச் சேர்ந்த மாயன் (45), ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று(ஏப். 24) மாலை மாயன் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். இரவு சுமார் 8.30 மணிக்கு மாயன், அவரது மனைவி முத்தம்மாள், இரண்டாவது மகன் முத்துக்குமார் ஆகியோர் வீட்டில் இருந்து உள்ளனர். அப்போது மூத்த மகன் முகேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்து உடனே வீட்டில் வெளியே இருந்த செம்பை எடுத்து மாயனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.

குடிபோதையில் தகராறு:  மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!
சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

இதனைத் தொடர்ந்து, தந்தை - மகன் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாயன் தனது மகனை தாக்கி உள்ளார். மனைவி முத்தம்மாள் இருவரையும் தடுத்து உள்ளார். சிறிய கத்தியைக் கொண்டு மாயன் தனது மகன் முகேஷை குத்தியுள்ளார்.

பின்னர், இரண்டு சக்கர வாகனத்தில் அவரது தம்பி முத்துக்குமார் தனது நண்பர்களுடன் சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று(ஏப். 25) சிகிச்சை பலன் அளிக்காமல் முகேஷ் பலியானார். இதையடுத்து கத்தியால் குத்திய தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com