காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தனி நபர் ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அருகில் உள்ள தலித் மக்களின் குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளார்.
காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

திருப்பூர்: காங்கேயம் நிழலி பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள், தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அரசு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, நிலத்தை சுத்தம் செய்யும் போது சில வீடுகளை சேதப்படுத்தியதால், தாங்கள் வெளியேற்றப்படும் என அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறுகின்றனர். இந்த பகுதியில் 40 வீடுகள் உள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் அந்த பகுதியைச் சேர்ந்த சாயாத்தாள் (50) கூறுகையில், "நான் தினக்கூலி வேலை செய்து வருகிறேன். இங்கு வசிக்கும் அனைவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து காங்கேயம் சக்தி விநாயகபுரத்தில் உள்ள நிழலி பகுதியில் சிறிய வீடுகள் கட்டி வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நிலங்களை வாங்கினார். சில நாட்களுக்கு முன், மண் அள்ளும் இயந்திரங்களுடன் நிறைய ஆட்களை கூட்டி வந்தார். நாங்கள் விசாரித்தபோது, ​​நிலத்தை சமன் செய்வதாக கூறினர். சில நாட்களில் எங்கள் குடியிருப்பின் அருகில் உள்ள நிலத்தை சமன்படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் எங்கள் பகுதி எல்லைக் கற்களை அகற்றியபோது , ​​நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அந்த நிலத்துக்கு தனி நபர் ஒருவர் உரிமை கொண்டாடி எங்களை மிரட்டினார். மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, எங்கள் குடியிருப்புகளின் சுவர்களை சேதப்படுத்தினர். இதனால் எனது சகோதரி வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற செயல்களால் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்" என்றார்.

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

அங்கு வசிக்கும் கே மல்லிகா (42) கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், அந்த நபர் தனது நிலத்தை புதர்கள் மற்றும் செடிகளால் மூடப்பட்டிருப்பதால், சுத்தம் செய்து சமன்படுத்தி வந்தார். எனவே, அன்று மண் அள்ளும் இயந்திரத்துடன் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், இந்தமுறை எங்கள் பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதிகளை சமன் செய்ய ஆரம்பித்தனர். நாங்கள் எதிர்த்தபோது ​​மிரட்டல் விடுத்தனர். அந்த தனிநபர் அரசியல் தொடர்பு கொண்டவர் என்பதால், நாங்கள் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆதிதமிழர் ஜனநாயக பேரவை தலைவர் கே.பௌத்தன் கூறுகையில், ''சக்தி விநாயகபுரத்தில் அந்த நபருக்கு சொந்தமாக பல மனைகள் உள்ளன. எல்லப்பாளையம் புதூரில் உள்ள சக்தி விநாயகபுரத்தின் கிழக்குப் பகுதியில் அவருக்கு சொந்தமான 4-5 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு திட்டமிட்டுள்ளார். அதற்கு அருகில் தலித் காலனி இருந்ததால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு பழங்குடியின காலனி அருகே உள்ள 1 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அரசு நிலமான ஓடை புறம்போக்கு நிலத்தைச் சமன் செய்து, மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஏழு வீடுகளின் சுவர்களைச் சேதப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, "எங்களுக்கு இந்த சம்பவம் தொடர்பான மனு கிடைத்துள்ளது. அதை எல்லப்பாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பியுள்ளோம். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவாளர் ஆகியோர், சக்தி விநாயகபுரத்தில் உள்ள இடத்தை ஆய்வு செய்து, பதிவேடுகளை சரிபார்த்து, அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com