நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

மே 2-ஆம் தேதி முதல் புதிய அட்டவணை நடைமுறைக்கு வருகின்றது.

News image

மின்சார ரயில்

Updated On :29 ஏப்ரல் 2024, 7:20 am

DIN

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

வேலூரில் இருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிக்கு பணிக்கு வந்து செல்வோரின் வசதிக்காக காலை 6 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு மின்சார ரயில் சென்னைக்கு 9.50 மணிக்கு வரும் சேரும் வகையில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில் மீண்டும் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடையும்.

இந்த நிலையில், ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 2-ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேடராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணியளவில் வந்துசேரும் வகையில் அட்டவணை வெளியிடபட்டுள்ளது.

Story image

வேலூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வழக்கம்போல் காலை 9.50 மணிக்கு வந்து சேரும்.

மறுவழியில் இரவு 9.40 க்கு சென்னையில் இருந்து வேலூர் சென்றடையும் மின்சார ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.