

புது தில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மன்னிப்புக் கேட்டது.
அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மன்னிப்புக் கோரியது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவரும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.