சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும் வானிலை மையம் எச்சரிக்கை

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 7:58 pm

Din

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் புதன் முதல் வெள்ளிக்கிழமை(மே1-3) வரை 3 நாள்கள் வெப்ப அலை வீசக்கூடும்; அதே வேளையில், மேற்கு தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : தமிழக உள் மாவட்டங்களில் புதன் முதல் சனிக்கிழமை)மே 1-4) வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

அதேசமயம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் புதன் முதல் வெள்ளிக்கிழமை(மே1-3) வரை 3 நாள்கள் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸையொட்டியே இருக்கக்கூடும்.

மழைக்கான வாய்ப்பு: தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன்காரணமாக புதன்கிழமை முதல் திங்கள் கிழமை (மே 1-3)வரை மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): தக்கலை (கன்னியாகுமரி) 50, கோழிப்போா்விளை (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 30, குழித்துறை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 20,

தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு(பாரன்ஹீட்): பரமத்தி வேலூா்- 108.5, ஈரோடு-107.96,திருப்பத்தூா்-107.24,வேலூா்-106.88, திருச்சி-106.34,சேலம்-105.44, மதுரை விமான நிலையம் 105.08, தருமபுரி, திருத்தணி-104.36, மதுரை நகரம் 104.36, நாமக்கல், தஞ்சாவூா்-104,கோவை-103.64, சென்னைமீனம்பாக்கம்-102.92, பாளையங்கோட்டை-100.76.