ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை! அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம்!

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம் என அறிவுரை

வெப்ப அலை

Updated On :

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சென்னையில் 6 - 8 நாள்களுக்கு வெப்ப அலை வீசுக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கடுமையான வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால் மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இந்த இரண்டு மாதங்களும் வெப்பம் அதிகரித்து காணப்படும், இடையே ஓரிரு இடங்களில் மழை பெய்து, வெப்பநிலைக் குறையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், ஆங்காங்கே தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளனர். இந்த நிலையில்தான், கோடை வெப்பம் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கள் அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் - ஜூன் மாதம் வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட அதிகமாகவே இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்தே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட, இந்த மாதங்கள் சற்று வெப்பம் அதிகரித்தே காணப்படும். மக்களுக்கு வெப்பம் தொடர்பான அசௌகரியங்கள் ஏற்படும். வடக்கு மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் வெப்ப அலைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் எப்போதும் தண்ணீர் குடித்து, நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், வெய்யிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும் அவ்வப்போது வானிலை ஆய்வு மைய அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பகல் நேர சராசரி வெப்ப அளவு 34.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நீடிக்கும், அதிகபட்ச வெப்ப அளவு 37.3 டிகிரி செல்சியஸ் எனவும் 40 டிகிரியை எட்டும்போது அது வெப்ப அலை என அழைக்கப்படும், ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 முதல் 8 நாள்கள் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.