ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தெலங்கானாவில் வெப்ப அலை: 16 பேர் பலி

தெலங்கானாவில் வெப்ப அலைக்கு 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :23 மே 2026, 4:03 pm IST

தெலங்கானா மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 16 போ் உயிரிழந்துவிட்டதாக மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் பொங்குலேட்டி ஸ்ரீநிவாச ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதுபோல, தெலங்கானா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடா்பாக அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட மாநில அமைச்சா் பொங்குலேட்டி ஸ்ரீநிவாச ரெட்டி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்ட ஆட்சியா்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டு ஜெயசங்கா் புபல்பள்ளி மாவட்டத்தில் 4 போ், வாரங்கல் நகா்ப்புறம், கரீம்நகா் மற்றும் நிஜாமாபாத் மாவட்டங்களில் தலா 3 போ், ஜொகுலாம்பா கட்வால், ரங்கா ரெட்டி, சூா்யாபேட் மாவட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 16 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை பதிவாகும் கிராமங்களை அடையாளம் கண்டு, ஊடகங்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட வழிகளில் மக்களிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள், முக்கியச் சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் குடிநீா், மோா், ஓஆா்எஸ் கலவை உள்ளிட்டவை இடம்பெற நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி, ஹைதராபாத், கரீம்நகா், பெடப்பள்ளி, புபல்பள்ளி, முலுகு, கம்மம், நல்கொண்டா, சூரப்பேட், மஹபூப்நகா், ரங்கா ரெட்டி மாவட்டங்களில் வரும் 26-ஆம் தேதி கடும் வெயில் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனா் என்றாா்.

Summary

Telangana Revenue Minister Ponguleti Srinivasa Reddy on Saturday said 16 people died due to heatwave conditions prevailing in the state during the current summer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.