தெலங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் வெள்ளிக்கிழமை உலை(ரியாக்டர்) திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் 8 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தின்போது, பத்து பேர் அந்த இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
இருவர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
வெடிவிபத்தைத் தொடர்ந்து கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்த மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே ஆலையில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
Summary
One person was killed and seven others suffered injuries following a reactor blast at a pharma plant in Nalgonda district of Telangana on Friday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: நகைக்கடையில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயம்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


