மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்

தெலங்கானாவில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Telangana: 3,700 illegal LPG cylinders seized in crackdown

எல்பிஜி சிலிண்டர்கள்

Published On :

தெலங்கானாவில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆங்காங்கே சில உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கிடைப்பதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால், இருப்பு வைத்திருக்கும் சிலிண்டா்களை பதுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தெலங்கானாவில் மார்ச் 12 முதல் இதுவரை சுமார் 3,700 சட்டவிரோத எல்பிஜி சிலிண்டர்களை நுகர்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது ரூ. 1.10 கோடி மதிப்பிலான 70 சிறிய சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 216 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கி வைப்பவர்கள் அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் எம். ஸ்டீபன் ரவீந்திரா கடந்த மார்ச் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.