
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 2 ஆம் தேதி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார்.
விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.