
அருந்ததியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்திடுமாறு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த தீர்ப்பால் இங்கேயுள்ள ஒடுக்கப்பட்ட, அடித்தட்டில் இருக்கிற அருந்ததியர் பிரிவு மக்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கப்பட்டிருக்கிறது.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அருந்ததியர் பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக மாற்றித்தர வேண்டிய அவசியமிருக்கிறது. அதை இந்த அரசு செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.