
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பர்.
இந்த நிலையில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.