மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா?: வயநாடு விவகாரத்தில் துரைமுருகன் விமர்சனம்

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
வேலூரில் அமைச்சர் துரைமுருகன்.
வேலூரில் அமைச்சர் துரைமுருகன்.
Published on
Updated on
1 min read

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வேலூரில் அமைச்சர் துரைமுருகன்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? முதல்வர் ஸ்டாலின் பதில்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது அவர்களுக்கு இதயத்தில் இருப்பது இதயமா அல்லது கல்லா என தெரியவில்லை.

மேகேதாட்டு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, நானும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போதுதான் தெரிகிறது.

விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது என பதிலளித்தார் அமைச்சர் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com