சென்னை: இரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான், சென்னையில் இரவு வேளையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் இரவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு வரை செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி,திருப்போரூர்,வண்டலூர்,அம்பத்தூர் பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

