ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வினேஷ், நீங்கள்தான் உண்மையான சாம்பியன்: மு.க. ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

News image
வினேஷ் போகத்- PTI
Updated On :7 ஆகஸ்ட் 2024, 12:00 pm

DIN

நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன் என்று வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இந்நிலையில், வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோவுக்கு மேல், அதாவது 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் பின்னடைவு, வலிமை, இறுதிப் போட்டிக்கான பயணம் கோடிக்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

சில கிராம் உடல் எடையினால் ஏற்பட்டுள்ள தகுதி இழப்பு உங்கள் மன உறுதியையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான மன உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுவிட்டீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முயற்சிகளை எடுத்தபோதிலும், அவரது தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.