குற்றச்சாட்டு பதிவுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தன்னை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அமலாக்கத்துறையின் விசரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், பிணை வழங்கக் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், செந்தில் பாலாஜியின் மனு பலமுறை தள்ளுபடி செய்த நிலையில், அவர் தொடர்ந்த புதிய மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கில் இன்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படுகிறது.
செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வாசிக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் இருக்கையில் அமர வைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியில் நீதிமன்றக் காவல் இதுவரை தொடர்ந்து 48 முறை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.