தந்தையாக இருந்து திட்டத்தை உருவாக்கியுள்ளேன்: மு.க. ஸ்டாலின்

தந்தையாக இருந்து திட்டத்தை உருவாக்கியுள்ளேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின்
விழாவில் முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவராக இருந்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்த கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கென நிகழாண்டில் ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேற்று இரவே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், பள்ளி படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும், ஒருவர் கூட திசைமாறாமல் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு உடனடியாக கல்லூரியில் சேர வேண்டும்,

தமிழக அரசின் திட்டங்களை தமிழக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றார்.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை கடந்த 2022 செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதுபோல, நிகழ் கல்வியாண்டில், மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தமிழ்ப் புதல்வன் எனும் பெயரிலான திட்டமானது, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி உயா் கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com