கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆனைமடுவு அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் தோற்றம்.

Updated On :

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை.

இதனால், அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று போன நிலையில், வரலாறு காணாத அளவுக்கு சுட்டெரித்த கோடை வெப்பத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மே மாதம் வரை அணையில், 10.60 அடியில், 12.87 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே குட்டை போல சேறும் சகதியுமாக தேங்கிக் கிடந்தது. இதனால், கவலையடைந்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இதனையடுத்து இந்த மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 30.84 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இன்று காலை நிலவரப்படி 46.64 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதால், அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு 127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணை பகுதியில் மட்டுமின்றி, குறிச்சி, கோணஞ்செட்டியூர், ரங்கனூர் கோலாத்துக்கோம்பை, கீரப்பட்டி, கண்கட்டிஆலா, சின்ன குட்டிமடுவு, பெரியகுட்டிமடுவு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. பருவமழை துவங்குவதற்கு முன்பே, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை பாசன விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.