யானைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்.(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆக. 12 ஆம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

யானைகளை பாதுகாக்க 1972ல் யானைகள் பாதுகாப்புச் சட்டம், கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும் யானைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் யானைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம்.

mk stalin
கருணாநிதி நினைவு நாணயம்: ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்

பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை உலக யானைகள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என்று பதிவிட்டு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com