ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக பங்கேற்க முடிவு செய்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (ஆக.15) தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா். இதில் பங்கேற்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுக்கும் அவா் அழைப்பு விடுத்துள்ளாா்.
காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தில் அதிமுக பங்கேற்க முடிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பென்ஜமின் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.