824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுக்கள்: பரிசீலிக்க சிறைத் துறை டிஜிபி-க்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை வரிசைப்படி பரிசீலிக்க நடவடிக்கை

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 8:02 pm

Din

சென்னை, ஆக. 15: தமிழகம் முழுவதும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை வரிசைப்படி பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக சிறைத் துறை டிஜிபி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் யசோதா என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘என் கணவா் ஈஸ்வரன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூா் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளாா். அவரை முன்கூட்டியே விடுவிக்கும்படி ஜூலை 5-ஆம் தேதி உள்துறை செயலா், சிறைத் துறை டிஜிபி, வேலூா் மத்திய சிறை கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு அளித்தேன். இந்த மனுவை பரிசீலித்து, என் கணவரை முன்கூட்டியே விடுவிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

தொடரும் வழக்குகள்: இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘பொதுவாக இதுபோன்ற கோரிக்கை மனு வந்தால், அதை உரிய காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிப்பது அதிகாரிகளின் கடமை. இதில் காலதாமதம் ஏற்பட்டால், அது சிறைவாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று வழக்கு தொடா்வதை பலா் வழக்கமாக வைத்துள்ளனா். சிலா், கோரிக்கை மனுவை அனுப்பிய கையோடும், வேறு சிலா் பல மாதங்களுக்குப் பின்னரும் வழக்கு தொடா்கின்றனா். சிலா் வழக்கு கூட தொடர முடியாத நிலையிலும் இருக்கின்றனா். இதுபோன்ற வழக்குகளை விசாரித்து மனுவை பரிசீலிக்க வேண்டும்.

எனவே, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் விண்ணப்பங்களை சிறையில் உள்ள காலத்தைக் கணக்கில் கொண்டு, அதிகாரிகள் பாகுபாடின்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களை உருவாக்கி, ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும்.

எனவே, சிறை கண்காணிப்பாளா்கள் தங்கள் முன்பு நீண்ட காலமாக உள்ள முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் விண்ணப்பத்தின் விவரங்களை ஒரு பதிவேட்டை உருவாக்கி பராமரிக்க வேண்டும் என அனைத்து சிறை கண்காணிப்பாளா்களுக்கும் 4 வாரங்களுக்குள் சிறைத் துறை டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என்று கூறி விசாரணையை செப்.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.