நீலகிரி ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கோத்தகிரியில் அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
MK stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கோத்தகிரியில் அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரிமாவட்டம், கோத்தகிரிவட்டம், கெங்கரை-1 கிராமத்தில் இன்று(16.08.2024) காலை சுமார் 06.10 மணியளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது உயர் மின்அழுத்தக்கம்பி பேருந்தின் மீது உரசிய விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் நடத்துநர் பேருந்துப் படிக்கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசுப்பேருந்து ஓட்டுநர் பிரதாப் (வயது 42) த/பெ. தேவராஜ் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும்அடைந்தேன்.

MK stalin
ஹரியாணாவில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? அமைச்சர் அதிஷி பதில்

இவ்விபத்தில், உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் பிரதாப்பை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com