துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.
துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published on

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை வழங்கும் நிறுவனத்தினர் மின்கட்டண உயர்வு காரணமாக, ஐஸ் கட்டிகளுக்கு விலையேற்றம் செய்தனராம்.

துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுலை அழைக்காதது ஏன்? முதல்வர் விளக்கம்

இதனால், ஐஸ்கட்டி பார் ஒன்றுக்கு ரூ.10 விலை உயர்வு செய்யப்பட்டதாம். இந்த விலையேற்றத்தை ஏற்க மறுத்த விசைப்படகு உரிமையாளர்கள, விலை உயர்வைக் கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், வழக்கமாக செல்லவேண்டிய சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com