கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி வன்கொடுமை- என்சிசி பயிற்சியாளர் கைது
கிருஷ்ணகிரி அருகே என்சிசி பயிற்சியாளரால் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சிவராமன்,

கைதுசெய்யப்பட்ட சிவராமன்,
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் போலீஸ் காவலிருந்து தப்ப முயன்ற போது அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமின் போது, எட்டாம் வகுப்பு மாணவி, பயிற்றுநர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்ட பிரிவில் வழக்குப்பதிந்து பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், கோவையில் தலைமறைவாக இருந்த பயிற்சியாளர் சிவராமனை தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவராமன், விசாரணைக்காக கிருஷ்ணகிரி அழைத்து வரப்பட்டார். அப்போது, போலீஸாரின் பாதுகாப்பிலிருந்து தப்பமுயன்ற சிவராமன், தவறி கீழே விழுந்ததில் அவரது வலது கால் எலும்பு முறிந்தது.
எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் சிவராமன், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...