
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 23 கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் விவரங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானத்தை குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் குளிர்பான ஆலைகள் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கோவையிலும் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 9 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை மாநகரில் காந்திபுரம், வ.உ சி பூங்கா, காந்தி பூங்கா, ஆர்.எஸ். புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள்,18 மொத்த விற்பனையாளர் என மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 23 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் முழுமையான லேபிள் விவரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
மேலும், இதுபோன்ற காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.