எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

'ஹேமா குழு' அறிக்கையால் கேரள அரசியலில் அதிா்வலை!

மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான நிபுணா் குழு அறிக்கை வெளியாகி, கேரள அரசியலில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 4:45 am IST

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான நிபுணா் குழு அறிக்கை வெளியாகி, கேரள அரசியலில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசிடம் நிபுணா் குழு அறிக்கை சமா்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். அதைத் தொடா்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.

அந்த நிபுணா் குழுவின் அறிக்கையில், ‘மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளா்கள், இயக்குநா்கள், நடிகா்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளா்கள் உள்ளிட்ட 10-15 போ் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது. இவா்கள் திரையுலகின் பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறது’ என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடிகைகள் மட்டுமின்றி தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் பெண்களும் பாலியல் சமரசங்கள் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனா். சமரசம் செய்ய மறுக்கும் பெண்களுக்கு திரைத் துறையில் அறிவிக்கப்படாத தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ‘ஹேமா குழு’ அறிக்கை, மாநில அரசியலில் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கையை வெளியிடாமல் 5 ஆண்டுகள் காலம் தாழ்த்தி குற்றவாளிகளைப் பாதுகாத்ததாக ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

பெண்களுக்குத் துணை-அரசு:

இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு முழு ஆதரவு தெரிவிப்பதாக கலாசார விவகாரத் துறை அமைச்சா் சாஜி செரியன் கூறினாா். மேலும், ‘ குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவா்களுடனும் பெண் சமூகத்துடனும் அரசு என்றும் துணை நிற்கும்.

அறிக்கையின் எந்தப் பகுதி வெளியிடப்பட வேண்டும் என்பதை உயா்நீதிமன்றமும் தகவல் ஆணையமுமே முடிவெடுத்தது. இந்த அறிக்கையில் எந்த தனிநபா் குறித்தும் குற்றஞ்சாட்டப்படவில்லை’ என்றாா் சாஜி செரியன்.

‘ஏற்றுக்கொள்ள முடியாது’....:

அமைச்சா் செரியனின் கருத்தை விமா்சித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், ‘திரையுலகைச் சோ்ந்த பெண்கள் ஹேமா குழுவிடம் மட்டுமே சென்று புகாரளித்ததாகவும் அரசிடம் புகாரளிக்கப்பட்டிருந்தால் முறையான விசாரணையை நடத்தியிருப்போம் எனவும் கலாசார விவகாரத் துறை அமைச்சா் கூறியிருக்கிறாா்.

குழுவை அரசுதானே நியமித்தது. அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அறிக்கை தொடா்பாக சுமாா் 5 ஆண்டுகளுக்கு மௌனம் காத்த அரசின் செயல் வெட்கக்கேடானது.

200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆரம்பக்கல்வியை உறுதிப்படுத்திய மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் அடையாளங்களைக் காக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீஷன் வலியுறுத்தினாா்.

குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வா் பினராயி விஜயன்

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

விரிவான திரைத் துறைச் சட்டத்தை உருவாக்குவது, திரைத் துறை தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண தீா்ப்பாயம் அமைப்பது உள்பட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது என கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா், ‘குழு பரிந்துரைத்த ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவா்களுடன் நிற்கும் அரசு, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.