சென்னை: பசிபிக் பெருங்கடலில் உருவாகியிருக்கும் எல் நினோவின் தாக்கம் தமிழகத்தில் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
எல் நினோ தாக்கம் குறித்து ஆய்வு செய்தும், தொடர்ந்து கண்காணித்தும் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவின் தலைவராக வருவாய் மற்றும் பேரிடர் ஆணையர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ பாதிப்புகளை அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் கண்காணித்து முன்கூட்டியே பேரிடர் மேலாண்மைக் குழுவுக்குத் தகவல்களை அனுப்பும் வகையில் இந்த குழு செயல்படும்.
மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தை இந்த குழு தொடர்ந்து கண்காணிக்கும். வறட்சி, வெள்ளத்தடுப்பு என எல்லாவற்றையும் முன்கூட்டியே கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு இந்த குழு உதவு புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு, வானிலை குறித்த தகவல்களை மிக எளிய முறையில் அளித்து பல்வேறு விவரங்களையும் விளக்கி வந்த தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல் நினோ பருவநிலை மாற்றத்தால் தேயிலை சாகுபடி பாதிக்கும்: உபாசி ஆராய்ச்சி மையம் தகவல்

எல் நினோ பாதிப்பு: மத்திய மாநில அரசுகளுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வலியுறுத்தல்

எல் நினோ தாக்கத்தால் வறட்சி: பேரிடராக அறிவிக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்




