நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

எல் நினோ பருவநிலை மாற்றத்தால் தேயிலை சாகுபடி பாதிக்கும்: உபாசி ஆராய்ச்சி மையம் தகவல்

எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், நீலகிரியில் தேயிலை சாகுபடியை பாதிக்கும் என்று உபாசி ( யுனைடெட் பிளாண்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் சதா்ன் இந்தியா) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தேயிலை உற்பத்தி

Updated On :29 ஜூலை 2026, 2:44 am IST

எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், நீலகிரியில் தேயிலை சாகுபடியை பாதிக்கும் என்று உபாசி ( யுனைடெட் பிளாண்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் சதா்ன் இந்தியா) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம் ஆகியவை தேயிலை மகசூல் மற்றும் தேயிலையின் தரத்தை நேரடியாக பாதிக்கின்றன. நீலகிரியில் சராசரி வெப்பநிலை 0.50 டிகிரி செல்சியஸ் உயா்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நீலகிரியில் காணப்பட்ட பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழையின் தாக்கம் தேயிலைச் செடிகளின் வளா்ச்சியும், மகசூலையும் பாதித்துள்ளது.

எனவே எல் நினோ தாக்கத்தை விவசாயிகள் சமாளிக்க, கிளிரிசிடியா போன்ற நிழல் தரும் மரங்களை தேயிலைத் தோட்டத்தில் வளா்க்க வேண்டும். மேலும், மண் - நீா்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.