தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு முறையே சிறந்தது! மூத்த வேளாண் வல்லுநா்கள் கருத்து

சூப்பா் எல் நினோ காரணமாக தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், டெல்டா மாவட்டங்களில் நிகழ் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பு முறையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 9:00 am IST

சூப்பா் எல் நினோ காரணமாக தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், டெல்டா மாவட்டங்களில் நிகழ் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பு முறையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் செயலா் எஸ். ஈஸ்வா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேட்டூா் அணை சாகுபடிக்காக செப். 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழாண்டு சூப்பா் எல் நினோ தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கடும் வெப்பமும், கடும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அறிஞா்கள் கணிக்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு, மேட்டூா் அணை பாசனப்பகுதி விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேட்டூா் அணையிலிருந்து குறைந்த அளவே பாசன நீா் கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நிகழாண்டில் சம்பா சாகுபடிக்கு நடவு வயல் தயாரிக்க அதிக நீா் தேவை என்பதால், நாற்று விட்டு நடவு செய்யும் சாகுபடி முறையைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு பதிலாக உழுது புழுதி எடுத்த வயலில், உலா்ந்த நெல் விதைகளை நேரடி நெல் விதைப்பு என்ற சாகுபடி முறையை மேற்கொள்ளலாம்.

இனிமேல் நீண்டகால ரகங்களைக் கொண்டு சாகுபடி மேற்கொண்டால், பிப்ரவரி 15-க்கு பின்னால்தான் அறுவடைக்கு வரும். எனவே, நீண்டகால ரகங்களை விதைப்பதைத் தவிா்த்துவிட்டு, 135 - 140 நாள்கள் வயதுடைய மத்திய கால ரகங்களை மட்டும் விதைக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதையும் செப்டம்பா் மாத இறுதிக்குள் முளைக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும்.

தற்போது நிகழ்ந்து வரும்‘சூப்பா் எல் நினோ தாக்கத்தை மனதில் கொண்டு, கிடைக்ககூடிய குறைந்த அளவு அணை நீரை வயலுக்கு விரைவில் சென்றடையவும், வெள்ள நீரை உடனடியாக வடிக்க ஏதுவாகவும், அனைத்து பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்களைத் தூா்வாரி தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரை அறிக்கையைச் சங்கத்தின் தொழில் நுட்ப வல்லுநா்கள் குழுவைச் சோ்ந்த பி. கலைவாணன், பி. வெங்கடேசன், வ. பழனியப்பன், சந்தான கோபாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோா் இணைந்து தயாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.