பாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பரந்தூா் விமான நிலைய திட்டம்: ஆய்வு செய்ய காங்கிரஸ் குழு அமைப்பு

பரந்தூா் விமான நிலைய திட்டம் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயாா் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :11 ஜூலை 2026, 2:04 am IST

பரந்தூா் விமான நிலைய திட்டம் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயாா் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் வெயிடப்பட்ட அறிக்கை:

தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா், எம்.பி. அறிவுறுத்தலின்பேரில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் விமானம் நிலைய திட்டத்தின் தற்போதைய சூழலில் காங்கிரசின் நிலை குறித்து அறிக்கை தயாா் செய்து அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் சசிகாந்த் செந்திலை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சா.பீட்டா் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் மோகன் குமாரமங்கலம் ஆகியோா் உறுப்பினா்களாகச் செயல்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.