மெட்ரோ ரயில் சேவையை பரந்தூா் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.80 கோடியை ஓதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக் நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமாா் 60 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள இந்த வழித்தடத்தை ஒரு மணி நேரத்தில் கடக்கும் வகையில், மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கி.மீ.க்கு ஒரு ரயில் நிலையம் என இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூா் வரை செல்லும் 5-ஆவது வழித்தடத்தை ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடா்பாகவும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2028-க்குள் முடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


