தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:05 am IST

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச்சில் 1.01 கோடி போ் பயணித்துள்ளனா். மேலும் மாா்ச் 13- ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 3.90 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

பயணிகளில் தேசியப் பொது அட்டையாகக் கருதப்படும் சிங்காரச் சென்னை அட்டையில் 52.90 லட்சம் பேரும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 33,339 பேரும், கியூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையில் 48.73 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

மேலும் ஒரு முறை பயன்படுத்தும் டிக்கெட், டோக்கன் முறையில் 19.19 லட்சம் பேரும், இணையதள கியூ ஆா் குறியீடு மூலம் 2.16 லட்சம் பேரும், வாட்ஸ் ஆப் டிக்கெட் மூலம் 4.72 லட்சம் பேரும், பே ஏடிஎம் மூலம் 3.35 லட்சம் பேரும், ஓஎன்டிசி மூலம் 12.71 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

போன் பே மூலம் 2.41லட்சம் பேரும், சிஎம்ஆா்எல் கைப்பேசி செயலி மூலம் 71, 123 பேரும், சென்னை ஒன் செயலி மூலம் 2 லட்சம் பேரும் , சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான கியூஆா் குறியீடு மூலம் 1,318 பேரும் பயணித்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.