சென்னை அண்ணா அறிவாலயத்தில் பீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பீர் பாட்டிலை வீசிச் சென்றுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்த காவல் துறை, கோவர்தன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் கண்ணகி நகரைச் சேர்ந்தவர், அதிமுக முன்னாள் நிர்வாகி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.