துரைமுருகன் நீண்டகால நண்பர்; அவருடன் நட்பு தொடரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நான் ஆச்சரியப்படுகிற விஷயம், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. பழைய மாணவர்களைத்தான் சமாளிக்க முடியாது.
இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரை முருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்து கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ..
முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார். இதைக்கேட்டு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரங்கத்தினர் அனைவரும் சிரித்தனர். இதனிடையே காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்த நாள் விழாவில் ஞாயிற்றுகிழமை பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் ரஜினி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, மூத்த நடிகா்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த் என்று பதிலளித்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன் நீண்டகால நண்பர்; அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நம்ம நட்பு எப்போதும் தொடரும். கட்சிக் கொடி அறிமுகப்படுத்திய விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்றார்.