கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ... ரஜினியின் பேச்சைக் கேட்டு சிரித்த முதல்வர்!

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு. க. ஸ்டாலின்.
நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு. க. ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் மு. க .ஸ்டாலின், ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இங்கு வந்ததும் என்னிடம் நீங்கள் பேசுகிறீர்களா? எனக் கேட்டனர். வந்தபிறகு பேசாமல்போக முடியுமா? அறிவாளிகள் இருக்கிற இடத்தில் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம். ஆனால், என்ன செய்வது... இப்போது பேசி ஆக வேண்டிய சூழ்நிலை. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய விதம் சிறப்பு. உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படியொரு நூற்றாண்டு விழா நடந்ததில்லை. இனி கொண்டாடப்போவதும் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு. க. ஸ்டாலின்.
தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்

படையப்பா திரையிடலின்போது கலைஞர் வந்திருந்தார். சில இருக்கைகள் தள்ளி ஓரமாக முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். நான் அருகில் அழைத்தேன். அவர் தன் தந்தைக்கு மரியாதை கொடுத்து வரவில்லை. நான் ஆச்சரியப்படுகிற விஷயம், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. பழைய மாணவர்களைத்தான் சமாளிக்க முடியாது.

இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரை முருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்து கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ... முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

இதைக்கேட்டு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரங்கத்தினர் அனைவரும் சிரித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு. க. ஸ்டாலின்.
மேக்கேதாட்டு அணை - தொடர்ந்து எதிர்க்கிறது தமிழ்நாடு அரசு: அமைச்சர் துரைமுருகன்

ஸ்டாலின் பதில்: ரஜினிகாந்தின் பேச்சுக்கு தனது தலைமையுரையின் நிறைவாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியது:

புத்தக வெளியீட்டு விழாவுக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்று மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தும் வகையில் நடிகா் ரஜினிகாந்த் பேசினாா். அவா் கூறிய அனைத்தையும் நான் புரிந்து கொண்டேன். அவா் பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிட மாட்டேன். அனைத்திலும் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை அவருக்குத் தெரிவிக்கிறேன் என்றாா்.

நடிகா் ரஜினிகாந்தின் பேச்சும் அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் பதிலும் புத்தக வெளியீட்டு விழா மேடையை கலகலப்பாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com