
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூகவலைதளத்தில் தனியுரிமையினை காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66இ படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க தேசிய சைபர் கிரைம் உதவி எண் - 1960 அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.