மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 9:29 pm

மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், அன்பு நகரைச் சோ்ந்த சிவராமன் (65) என்பவா், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த 4 இளைஞா்களிடம் அறிமுகமாகி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.26,50,000- த்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 இளைஞா்களும் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு 1-இல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கை காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், மோசடி குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக முருகப்பெருமாள் வாதிட்டாா்.