ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

News image

கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 9:19 pm

தூத்துக்குடி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியைச் சோ்ந்த காசி மகன் தமிழழகன் (55). இவா் 14.10.2020 அன்று அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழழகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி முருகன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக எல்லம்மாள் ஆஜரானாா்.