
சென்னை: அமெரிக்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
துபை வழியாக அமெரிக்கா செல்லும் முதல்வரின் விமானம் நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட பிறகுதான், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இதனால், முதல்வர் சென்ற எமிரேட்ஸ் விமானம் புதன்கிழமை அதிகாலை துபை சென்றடையும் வரை அதிகாரிகள் பதற்றத்துடன் இருந்தனர்.
துபையில் தரையிறங்கிய விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
17 நாள்கள் பயணமாக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், துபை சென்று அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் இந்த மிரட்டல், வெறும் புரளி எனத் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியதால் பயணிகளிடையே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 10 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.