ஃபார்முலா 4 - புதிய அட்டவணை வெளியீடு

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
formula 4 car race
ஃபார்முலா-4 கார் பந்தயம்.(கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.

formula 4 car race
கூலி - சத்யராஜ் போஸ்டர்!

ஐ.ஆா். எல். என்று அழைக்கப்படும்இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.

பந்தயத்தின் பயிற்சி சுற்று, சனிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச காா் பந்தயமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com